ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தமிழக அரசு புறக்கணிப்பது ஏன் என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா மீனவர்களின் நலனுக்காக சாமந்தான் பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் இத்திட்டத்தை நிறைவேற்ற மனமில்லாமல் போனது ஏன்?
போராடும் மீனவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண முடியாமல் மீன்வளத்துறையின் அமைச்சர் அப்படி என்ன அதிமுக்கியமான வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்? ஜெயலலிதாவின் திட்டங்களை, கொள்கைகளை எல்லாம் புறக்கணிக்கிற பழனிசாமி அரசின் செயல்பாடுகளை அனைத்துத் தரப்பினரும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.