இன்றைக்கு மோடியிடமே அதிமுகவை அடகு வைத்து விட்டனர் என அதிமுகவை விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக இப்போதே தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுபயண பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். தற்போது கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் இவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், அதிமுக ஆட்சியில் அனைத்து மட்டத்திலும் ஊழல் மலிந்து விட்டது. முதல்வர் எடப்பாடியின் சம்பந்திதான் அனைத்து கான்ட்ராக்டுகளையும் எடுக்கிறார். சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில் ஊழல் முறைகேடு நடந்துள்ளது. கொரோனாவே விட மோசமான ஆட்சியாக இருக்கிறது.
ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. ஊழல் வழக்கில் தண்டனை முடிந்து சசிகலா வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு அடிப்பார். நீங்கள் தேர்தலில் அவர்களுக்கு ஆப்பு அடிக்க வேண்டும். தற்போது உள்ள அதிமுக, பாஜக, ஜெயலலிதா, சசிகலா என யாருக்குமே உண்மை இல்லை.
ஜெயலலிதா எப்படி இறந்தார்? அவருக்கு என்ன மருந்து கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் தெரியவில்லை. அந்த மோடியா? இந்த லேடியா என ஜெயலலிதா முன்பு குரல் எழுப்பினார். ஆனால் ஒட்டுமொத்தமாக இன்றைக்கு மோடியிடமே அதிமுகவை அடகு வைத்து விட்டனர் என அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.