விலையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல் என டிடிவி தினகரன் டிவிட்.
தமிழகம் உள்பட பல நகரங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தாண்டியதாக செய்திகள் வெளியான நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல்.
பெட்ரோல் - டீசலுக்கு வாட் வரி குறைப்பு, எரிவாயு சிலிண்டருக்கு மானியம் என்றெல்லாம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற மாநிலத்தில் உள்ள தி.மு.க அரசும் முன்வராதது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே,கொரோனா பேரிடரனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்கள் இதனால் மேலும் துன்பப்படுவது இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.