அதிமுக வுக்கு எதிராக செயல்பட்ட ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் திரும்பவும் அதிமுகவுக்கே சென்று விட்டது தொடர்பாக தினகரன் பதிலளித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுக கட்சியில் பொறுப்பில் இருப்பதாக அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் இதுகுறித்து 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில் சபாநாயகரின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக முடிவு செய்து மனு அளித்தது.
இந்நிலையில் திமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட கிட்டதட்ட அமமுக கூடாரமே காலியாகும் அளவுக்கு வந்துவிட்ட நிலையில் அந்த மூன்று எம்.எல்.ஏக்களும் அதிமுக வுக்கேத் திரும்பி விட்டன. இதனால் அமமுக இன்னும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற மானியக்கோரிக்கை கூட்டம் தொடர்பாக விவாதத்துக்கு வந்த தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த தினகரன் ‘அமமுகவை கட்சியாக பதிவு செய்யக் கூட்டம் நடத்தியபோது, எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் வந்திருந்தனர். அப்போது இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டால் உங்கள் பதவி போய்விடும் என்று கூறினேன். அவர்கள் ஊடகங்களில் பேசியதை நான் பார்த்தேன். அவர்கள் தங்களது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சென்றுள்ளனர். அதில் ஒன்றும் தவறில்லை’ எனப் பெருந்தன்மையாகக் கூறியுள்ளார்.