அமமுக வெளியிட்ட செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் புகழேந்தியின் பெயர் இடம்பெறாதது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமமுக கட்சியை சேர்ந்த புகழேந்தி, அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் குறித்து பேசிய வீடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அந்த வீடியோவில் பல வருடங்களாக யாரென்றே தெரியாத டிடிவி தினகரனை, நான் தான் அடையாளப்படுத்தினேன் என புகழேந்தி கூறியதாக இடம்பெற்றிருந்தது.
இது குறித்து டிடிவி தினகரனிடம் கேட்ட போது, நான் எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். புகழேந்தி திட்டமிட்டு பேசி வீடியோ எடுத்து வெளியிடவில்லை. புகழேந்தி விவகாரம் குறித்து தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
அதோடு இந்த விஷயம் ஓய்ந்துவிட்டது என நினைத்த நிலையில், சய்லெண்டாக இருந்துக்கொண்டு டிடிவி தினகரன் புகழேந்தியை கட்சியில் இருந்து ஓரம்கட்டிவிட்டார். ஆம், இன்று அமமுக வெளியிட்ட செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் புகழேந்தியின் பெயர் இடம்பெறவில்லை.
செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் புகழேந்தியின் பெயர் இடம்பெறாதது, அந்த வீடியொ விவகாரத்தின் எதிரொலி என கட்சிக்குள் பேசிக்கொள்ளப்படுகிறதாம்.