ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செயய் அனுமதி கேட்டு விண்னப்பித்த தினகரனின் கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் டிடிவி தினகரன் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குகிறார். எனவே, அங்கு பிரச்சாரம் களை கட்டத் தொடங்கியுள்ளது. திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே தங்கள் பிரச்சாரத்தை துவக்கிவிட்டனர். ஆனால், தினகரன் இன்னும் தனது பிரச்சாரத்தை துவக்கவில்லை.
இதற்காக கடந்த 4ம் தேதி போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், காவல்துறை இன்னும் தங்களின் அனுமதியை வழங்கவில்லை. அதேபோல், ஆன்லைன் மூலமாகவும் தினகரன் அனுமதி கோரினார். ஆனாலும், இன்னும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் கடந்த 4 நாட்களாக தினகரன் பிரச்சாரத்திற்கு செல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, இதுபற்றி நடவடிக்கை எடுக்குமாறும், பிரச்சாரம் செய்ய தினகரனை அனுமதிக்குமாறும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் இன்று புகார் மனு அளித்துள்ளார்.
ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே சதித்திட்டம் செய்து தினகரன் பிரச்சாரம் செய்வதை தடுப்பதற்காகவே இப்படி செயல்படுகின்றனர் என தினகரனின் ஆதரவாளர்கள் புகார் கூறிவருகின்றனர்.