Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேசுவது, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், விஜயின் தவெக வேகமாக செயல்பட்டு தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை பெறும் வேலைகயில் இறங்கியிருக்கிறது.
இந்நிலையில் தவெக கட்சியில் சார்பாக போட்டியிட விரும்பும் வேட்பாளருக்கு விருப்பமனு வழங்குவது தொடர்பாக தவெகபொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.. அதில் அவர் கூறியிருப்பதாவது..
வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கவுள்ளோம்.. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் கட்சியின் நிர்வாகிகள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். வேட்புமனு வருகிற 6ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 14ம் தேதி சனிக்கிழமை வரை கழக தலைமை செயலகத்தில் வழங்கப்படுகிறது..
வருகிற 6ம்தேதி பகல் 12 மணி முதலும், மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையும் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் அதைப் பெற்று அனைத்து விபரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அதில் அவர் கூறியிருக்கிறார்..