நாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தையொட்டி, அவர் செல்லும் வழியில் உள்ள உயர்மின் அழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்துமாறு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் மின் வாரியத்திடம் மனு அளித்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தனது பரப்புரை பயணத்தை மேற்கொள்ளும் பாதையில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் அல்லது மின் ஊழியர்களை நியமித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "விஜய்யின் நிகழ்வு தொடங்கி முடியும் வரை மின் நிறுத்தம் செய்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் கூடும் என்பதால், எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கட்சியின் மாவட்ட செயலாளர் சார்பில் மின்வாரிய அலுவலகத்தில் இந்த அதிகாரபூர்வ மனு அளிக்கப்பட்டுள்ளது.