சென்னை கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்தூர் ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்கனவே இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதையும், அதேபோல் பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வழியாக பரந்தூர் விமான நிலையம் வரை 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதையும் விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
இந்த மெட்ரோ பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த டெண்டரில் கலந்து கொள்ள பிப்ரவரி 28ஆம் தேதி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.