Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை மேயர் வேட்பாளரா உதயநிதி ஸ்டாலின்?

Advertiesment
சென்னை
, திங்கள், 14 அக்டோபர் 2019 (20:14 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மிக விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அனேகமாக வரும் டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள மேயர் வேட்பாளர்களை திமுக இறுதி செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சென்னை மேயர் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் களமிறங்குவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 11 எம்எல்ஏக்களை திமுக வைத்திருப்பதால் மேயர் பதவியை எளிதாக கைப்பற்றிவிடலாம் என்று திமுக கருதுகிறது.
 
சென்னை
இந்த நிலையில் உதயநிதியை மேயர் வேட்பாளராக போட்டியிட வைக்காமல் செய்வதற்காகவே சென்னை மேயர் தொகுதி பெண்களுக்கு ஒதுக்க அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சென்னை மேயர் வேட்பாளராக அமைச்சர் ஜெயகுமார் தனது மகனை போட்டியிட திட்டமிட்டிருப்பதால் இதற்கு அவரது தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் ஒரு செய்தி வெளியாகி வருகிறது
 
இந்த நிலையில் சென்னை மேயர் வேட்பாளராக திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் பேரன் வெற்றி அழகன் போட்டியிடவும் காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே சென்னை மேயர் வேட்பாளருக்கு கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மயில் போல ஆர்டர் செய்தவருக்கு வந்த தொழுநோய் கேக் ! வைரல் வீடியோ