திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கண்காட்சியில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படமும் இருந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் கேள்வி எழுப்பினர். திமுகவின் எந்த பொறுப்பிலும் இல்லாத உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் இந்த கண்காட்சியில் எதற்காக வைக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டு அது வைரலானது
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, 'என்னுடைய படம் நேற்றே அங்கிருந்து அகற்றப்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றார்கள். நேற்றே அகற்றப்பட்டது என்றால் நேற்று முன் தினம் வரை அந்த படம் கண்காட்சியில் இருந்தது உண்மைதானே என்றும், அந்த படத்தை வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்,.
மேலும் ஒரு திமுக நிகழ்ச்சி ஒன்றின் புகைப்படத்தில் உதயநிதியின் மகன் படமும் அச்சிட்டுள்ளது குறித்து குறிப்பிட்டுள்ள நெட்டிசன்கள் 'நான்காம் கலைஞர் என கிண்டலடித்து வருகின்றனர்.