Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அடிமைகளின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு எங்கே? உதயநிதி கேள்வி!

அடிமைகளின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு எங்கே? உதயநிதி கேள்வி!
, சனி, 27 பிப்ரவரி 2021 (10:56 IST)
அடிமைகளின் ஆட்சியில் சாதாரண பெண்கள் முதல் அதிகாரிகள் வரை பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என உதயநிதி ஆதங்கம்.

 
இது குறித்து உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்... முன்னாள் சிறப்பு DGP ராஜேஸ்தாஸின் பாலியல் அத்துமீறல் முயற்சி பற்றி உள்துறை செயலரிடம் புகாரளிப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. சென்னை வந்த போது, அவரை செங்கல்பட்டில் வழிமறித்து கார் சாவியை பிடுங்கி வைத்த மாவட்ட எஸ்.பி. கண்ணனின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. 
 
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை காப்பாற்ற புகார்தாரரான எஸ்.பி.யையே மிரட்டுவது கடும் கண்டனத்துக்குரியது. அன்று பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே புகாரளித்துவிடக் கூடாது என்ற நோக்கில் முதலில் புகார் செய்த பெண்ணின் பெயரை காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் வெளியே சொன்னார்.
 
இன்று பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யை புகார் கொடுக்க விடாமல் இன்னொரு எஸ்.பி.யே தடுக்கிறார். இந்த சம்பவங்கள் மூலம் அடிமைகளின் ஆட்சியில் சாதாரண பெண்கள் முதல் அதிகாரிகளாக பொறுப்பிலிருப்பவர்கள் வரை பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்பது தெளிவாகிறது.
 
கிட்டத்தட்ட குற்றத்துக்கு உடந்தையாக செயல்படுவது போல ராஜேஸ்தாஸை காப்பாற்ற முயன்ற செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், பாலியல் குற்றவாளிகளுக்கு மட்டுமன்றி அவர்களை காப்பாற்ற முனைவோருக்கும் தக்க பாடம் புகட்டுவதாக அமையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவுக்கு 22 தொகுதிகள்... ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஒப்புதல்!