மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் அந்த மசோதாவின் நகலை எரித்து போராட்டம் செய்தனர். இதனையடுத்து சென்னையில் உள்ள சைதாப்பேட்டை அருகே திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குடியுரிமை சீர்திருத்த சட்ட மசோதாவின் நகலை எரித்து போராட்டம் நடத்தினார். அவருடன் நூற்றுக்கணக்கான திமுகவினர் போராட்டம் நடத்தினர்
இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் குறித்து இதுகுறித்து சற்று முன்னர் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
நாங்கள் சென்னைக்குப் புதிது போலவும், ஊர் சுற்றிக் காட்டுவதுபோலவும் பேருந்தில் வைத்து சைதாப்பேட்டையை இருமுறை வலம் வந்தனர். கூட்டம் கலைந்துவிடும் என்பது காவல்துறையின் நம்பிக்கை. கலைந்து செல்பவர்களா கலைஞரின் உடன்பிறப்புகள், கடைசிவரை தொண்டர்கள் கூட்டம் குறையவேயில்லை