கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்து வந்த ஒருவர் அந்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருவர் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. தற்போது அந்த மூவர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த கொலை குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் ஆவேசமாக டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
திருமணம் செய்ய மறுத்தார் என்பதற்காக உளுந்தூர்பேட்டை அருகே சரஸ்வதி எனும் இளம்பெண்ணை மூவர் சேர்ந்து கொலை செய்துள்ள வன்முறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்தை மிரட்டி மாற்றிவிடலாம் என நினைப்பதும், அதற்காக கொலை வரை செல்வதும் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்
இத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். சரஸ்வதியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு தருவதோடு, பெண்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இனி நடக்காதவாறு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.