Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொடூரத்தின் உச்சம்: பதர வைக்கும் உமா மகேஸ்வரி போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்...

Advertiesment
உமா மகேஷ்வரி
, வியாழன், 25 ஜூலை 2019 (12:08 IST)
முன்னால் நெல்லை மேயர் உமா மகேஸ்வரியின் உடற்கூறாய்வறிக்கையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 
 
முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் உள்பட 3 மற்றும் வீட்டில் வேலை செய்துவந்த பெண் என 3 பேரையும் மர்ம நபர்களால் கொலை செய்துள்ளனர். இதனால் நெல்லை பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. 
 
இந்நிலையில் உமா மகேஸ்வரியை கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. உமா மகேஷ்வரியின் வீட்டில் சிசிடிவி இல்லை என்பதால் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை சோதனை போலீஸார் செய்து வருகின்றனர். 
உமா மகேஷ்வரி
இருப்பினும் விசாரணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் அளவிறகு போலீஸாருக்கு இதுவரை எந்த துப்பும் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இப்படி இருக்க உமா மகேஷ்வரியின் உடற்கூறாய்வறிக்கை வந்துள்ளது. 
 
இதில், உமா மகேஷ்வரி மற்றும் இருவர் முதுகு மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாக சில தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், உமா மகேஸ்வரி கழுத்தில் 6 இன்ச் ஆழத்துக்கு கத்தியால் குத்தி கொடூரமாக திருகி கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
உமா மகேஷ்வரியின் உடற்கூறாய்வறிக்கை உண்மையாக கூறுவது என்னவென தெரியாத நிலையில், அந்த மூவரின் இறப்பு கொடூரமான ஒன்றாக இருந்துள்ளது என்பது மட்டும் தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்