Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பணிமனைகளை முற்றுகையிட தொழிற்சங்கத்தினர் திட்டம்? – போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை!

TNSTC

Prasanth Karthick

, புதன், 10 ஜனவரி 2024 (09:14 IST)
தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்கள் பேருந்தை மறிக்க முயன்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இன்று இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வேலைக்கு வராத ஓட்டுனர்கள், நடத்துனர்கள், பணிமனை ஊழியர்கள் விவரங்களை மாவட்ட வாரியாகவும், கோட்ட வாரியாகவும் கணக்கெடுக்கும் பணியில் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டுள்ளது. மேலும் பேருந்துகள் இயக்கத்தை தடுத்து நிறுத்த முயன்றாலோ, பணிமனைகளை முற்றுகையிட முயன்றாலோ கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் தொழிற்சங்கங்களை எச்சரித்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை: கார்த்தி சிதம்பரம்