தமிழகத்தில் மெகா தடுப்பூசி மையங்கள் நடத்தப்படுவது இன்றுடன் நிறைவு பெறுகிறது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தடுப்பு மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் இன்றுடன் நிறைவு பெறுவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆனாலும் அக்டோபர் வரை அரசு மருத்துவமனைகளில் மட்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் இதுவரை 96 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் தவணைத் தடுப்பூசியும் 91 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்
மேலும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் பணியும் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்