திமுக கூட்டணியில் மதிமுக இல்லை என பகிரங்கமாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வைகோ நேரில் சென்று பார்த்தும் மதிமுக கூட்டணியில் இருப்பதாக ஸ்டாலின் சொல்லவில்லை
இந்த நிலையில் திமுக கூடாரத்தை காலி செய்யும் முடிவில் வைகோ இருப்பதாகவும், அவர் அதிமுகவை நெருங்குவதாகவும் மதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கு அச்சாரமாக கஜா புயலுக்கு தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும், புயலுக்கு பின் செய்து வரும் நிவாரண பணிகளையும் வைகோ பாராடினார். மேலும் தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் வைகோ, மாநில அரசை குறை கூறுவதை அவ்வப்போது தவிர்த்து வருகிறார்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு தரப்பில் சிறப்பான வாதம் எடுத்துவைக்கப்பட்டதாக வைகோ தற்போது கூறியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஸ்டெர்லைட் விஷயத்தில் தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த வைகோ, திடீரென தனது நிலையை மாற்றியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை கடுப்பேத்தவே வைகோ தமிழக அரசை புகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது