தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டும் என்றால் ஒன்று அதிமுக-பாஜக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும், இரண்டாவது எதிர் கூட்டணியான திமுக கூட்டணியை உடைக்க வேண்டும். இந்த இரண்டு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும் என்பதுதான் அமித்ஷாவின் திட்டம் என்று கூறப்படுகிறது
முதல் கட்டமாக அதிமுக, ரஜினிகாந்த், பாஜக ஆகிய மூன்றும் சேர்ந்த ஒரு வலுவான அணி உருவாக வேண்டும் என்பது மட்டுமில்லாமல் இந்த அணியின் வெற்றியை உறுதி செய்ய திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதும்தான் திட்டமாம். எனவே திமுக அணியை உடைக்க வைகோவை பாஜக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது
சமீபத்தில் டெல்லி சென்ற வைகோ பிரதமர் மோடி, அமித் ஷா, மற்றும் அத்வானி ஆகியோர்களை சந்தித்த போது வைகோவிடம் இந்த திட்டம் கூறப்பட்டுள்ளதாகவும், திமுக கூட்டணியில் இருந்து முதலில் காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்றும் அதன் பின்னர் ஒவ்வொரு கட்சியாக வெளியேற்ற வைக்க வைகோ உதவி செய்ய வேண்டும் என்றும் ரகசியமாக ஆலோசனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் தான் வைகோ காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
பாஜகவின் இந்த திட்டம் உண்மையா? அல்லது எதேச்சையாக மதிமுக-காங்கிரஸ் கூட்டணி மோதிக்கொள்கிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்