மதிமுக ஆரம்பித்த புதிதில் அதிமுக, திமுகவுக்கு இணையான வரவேற்பை பெற்றது. ஆனால் வருடம் ஆக ஆக வைகோ எடுத்த சில தவறான முடிவுகளால் அதன் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வந்தது.
குறிப்பாக மக்கள் நலக்கூட்டணி என்ற புதிய கூட்டணியை வைகோ ஆரம்பித்த பின்னர் அக்கட்சியின் வாக்கு சதவீதம் பெரும் வீழ்ச்சி அடைந்தது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து ஒரே ஒரு தொகுதியை மட்டுமே வைகோவால் பெற முடிந்தது
ஒருசில மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு உள்ள விசிக கூட போராடி 2 மக்களவை தொகுதிகளை பெற்ற நிலையில், வைகோ ஒரே தொகுதிக்கு ஒப்புக்கொண்டது அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதுமட்டுமின்றி இத்தனை வருட காலமாக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வந்த மதிமுக, வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட போவது அக்கட்சியின் வீழ்ச்சி அப்பட்டமாக தெரிவதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைந்துவிட வைகோ ஆலோசனை செய்து வருவதாக முன்னணி அரசியல் இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி உண்மையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்