Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலை பாக்கெட்டில் தமிழக அரசு: வைகோ விளாசல்!

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (14:26 IST)
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. 
 
ஆனாலும், நீதிமன்றத்தை நாடி இந்த ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பிருக்கிறது என செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், தற்போது இன்னும் ஓரிரு மாதங்களில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டியளித்துள்ளார். 
 
இவரின் இந்த பேச்சுக்கு வைகோ பதிலடி கொடுத்துள்ளார். வைகோ கூறியது பின்வருமாறு, கண்டிப்பாக ஸ்டெர்லைட் ஆலையை நடத்துவோம் என பேசிய ஸ்டெர்லைட் சிஇஓ ராம்நாத் நாக்கை அடக்கி பேச வேண்டும். 
 
தமிழக அரசின் ஆணை நிற்காது என பல்வேறு ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வட நாட்டவரை விட தென்னாட்டவர்கள் வீரமுள்ளவர்கள். ஆலையை திறக்க முடியாது. மீறினால் ஆலையே இங்கு இருக்காது. 
 
ஸ்டெர்லைட் ஆலை பாக்கெட்டில் தமிழக அரசு உள்ளது. மோடி பாக்கெட்டில் ஸ்டெர்லைட் முதலாளியா? அல்லது பணமா? என்பது தெரியவில்லை என விளாசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments