திமுக தலைவர் கருணாநிதி உடல் அடக்க செய்யப்பட்ட இடத்தில் வைரமுத்து பால் ஊற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய கோரிக்கை விடப்பட்டபோது தமிழக அரசு நிராகரித்தது.
பின்னர் உயர்நீதிமன்றத்தை நாடி திமுக அனுமதி பெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.
இன்று கவிஞர் வைரமுத்து கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் பலரும் வைரமுத்துவை விமர்சித்து வருகின்றனர். மூட நம்பிக்கை இல்லாத தலைவர் நினைவிடத்தில் பால் ஊற்றுவதா? என பலரும் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர்.