காஷ்மீரில் இரண்டு நாட்களுக்கு முன்னால் பயங்கரவாதிகளால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 45 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அஹமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தினர். இந்த தாக்குதலுக்கு ஒட்டுமொத்த நாடுமே சோகத்தை ஆழ்ந்தது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தன் இரங்கல் கவிதை ஒன்றை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் ,’இந்தியா மன்னிக்காது இனியும், மாவீரர்களே உங்கள் கருகிய சீருடைகளால் தீவிரவாதத்தின் மீது சவத்துணி போர்த்துவோம்.இந்தியாவின் கண்ணீரை விரல்களால் அல்ல துப்பாக்கி முனைகளால் துளைத்தெடுப்போம். நாய்கள் கனவு கண்டால் எலும்பு மழை பெய்யும். நாங்கள் கனவு கண்டால் ஆகாயம் அதிரும் நட்சத்திரம் உதிரும். மாவீர்களே எம்முயிர் காக்க தம்முயிர் தந்த தங்கங்களே இதோ 130 கோடி தலைகளின் ஒற்றை வணக்கத்தை ஏற்றுக்கொள்க வீழ்க சூழ்ச்சி... வெல்க வீரம் ...வாழ்க நாடு ...சூழ்க வெற்றி.’
இவ்வாறு அந்த இரங்களில் வீடியோவில் கவிஞர் வைரமுத்து பேசியிருக்கிறார்