அன்னபூர்ணா ஹோட்டலில் வானதி சீனிவாசன் ஜிலேபி சாப்பிட்டதாக அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கூறிய நிலையில் நான் அந்த ஓட்டலில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை என வானதி சீனிவாசன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
அன்னபூர்ணா ஹோட்டலுக்கு சென்று நான் ஜிலேபி சாப்பிட்டு பிரச்னை செய்ததாக சீனிவாசன் கூறியது தவறு என்றும் நான் அவரது ஓட்டலில் ஜிலேபி சாப்பிடவில்லை என்றும் மேலும் எந்த பிரச்சனையிலும் ஈடுபடவில்லை என்றும் வானதி தெரிவித்தார்.
அவராகவே எனக்கு போன் செய்து நான் தவறாக பேசி விட்டேன் மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அதற்காக நேரம் வாங்கித் தாருங்கள் என்று கேட்டதாகவும் அதனை அடுத்து மேலும் நான் பேசியது தவறு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டேன் உங்களது மனம் புண்பட்டிருந்தால் மன்னித்து கேட்டுக்கொள்கிறேன் என்று அவராகவே வந்து மன்னிப்பு கேட்டதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நான் பேசியது இணையத்தில் வேறு மாதிரி பரவி விட்டது என்றும் நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவன் என்றும் தனது குடும்பத்தை பற்றிய அவர் கூறியதாகவும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.