தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பிற்கு எதிரான ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ள நிலையில் மொழி திணிப்பை பாஜகவும் ஆதரிக்காது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் திரைப்பிரபலங்கள் இந்திக்கு எதிரான வாசகங்களை அடங்கிய டீசர்ட்டுகளை அணிந்து புகைப்படம் பதிவிட்டதால் சமூக வலைதளங்களில் “இந்தி தெரியாது போடா” என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டானது.
திரைத்துறையினரின் இந்த ட்ரெண்டிங் குறித்து பேசியுள்ள பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் ”மொழி திணிப்பை எப்போதும் பாஜக ஆதரித்தது கிடையாது. கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொள்வதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.