தேர்தலுக்குப் பின் என்னென்ன நடக்கும் என்பதை கணித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
தேர்தலுக்குப் பிறகான காட்சிகள்:
தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சி அமைந்தபிறகு பின்வரும் காட்சிகள் அரங்கேறக்கூடும்
1. கமல் மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்தக் கிளம்பிவிடுவார். மநீமவில் தற்காலிக தஞ்சம் புகுந்த சிலர் பாஜகவுக்கு செல்வார்கள்
2. பாமகவை பாஜகவில் இணைக்கும்படி டெல்லியிலிருந்து அழுத்தம் வருவதாக செய்திகள் வெளியாகும்
3. இபிஎஸ் - ஒபிஎஸ் பிரிவார்கள். எடப்பாடியின் பிடியிலிருந்து அதிமுக விடுபட்டு மேலும் வகுப்புவாத அரசியலை நோக்கி நகரும்
4. தமிழகக் கருத்தியல் களம் சமூகநீதியா? சனாதனமா?எனத் தெளிவாக அணிபிரியும்
தேர்தலுக்குப் பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது.
தோழர்களே!
சனாதனத்துக்கு எதிரான கருத்தியல் படைக்கலன்களைத் தயார்படுத்துங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பின்னப்பட்ட வகுப்புவாத வலைப்பின்னலை அடையாளங்கண்டு அறுத்தெறிவதே நமது முதன்மையான பணியாக இருக்கட்டும்.
இவ்வாறு விசிக எம்பி ரவிகுமார் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.