ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தமிழக அரசால் அமைக்கப்படும் குழுவில் உள்ளூர் மக்கள் யாரும் இடம் பெறக்கூடாது என வேதாந்தா நிறுவனம் பிடிவாதம் செய்து வருகிறது. கரணம் ஏற்கனவே இவர்களால் எங்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது அந்நிறுவனம் கூறியுள்ளது.
அனுமதி வழங்கினால் அடுத்த பத்து நாட்களுக்குள் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்கி விடுவோம் என கூறியுள்ள வேதாந்தா நிறுவனம் ஒரு நாளைக்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தயாரிக்க முடியும். தயாரித்த ஆக்சிஜனை யாரிடம் கொடுக்கச் சொல்கிறீர்களோ அவர்களிடம் கொடுத்து விடுகிறோம். ஆனால், உள்ளூர் மக்கள் மட்டும் உள்ளே வர கூடாது என அழுத்தமாக கூறியுள்ளது.