கடந்த 2000ஆம் ஆண்டில் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வழக்கில் வீரப்பன் கூட்டாளிகளான 9 பேரை ஈரொடு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
18 பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கன்னட நடிகர் ராஜ்குமார் தமிழக - கர்நாடா எல்லைப்பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்த போது சந்தனக்கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார்.மேலும் அவருடன் மூன்று பேர் கடத்தப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் ,பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் அதாவது 108 நாட்களுக்கு பிறகு நடிகர் ராஜ்குமார் மட்டும் வீரப்பனிடமிருந்து தப்பிவந்தார்.
இந்த கடத்தல் விவகாரத்தில் வீரப்பனுக்கு துணையாக இருந்து கடத்திய ஆயுதம் தாங்கிய 14 பேர் குற்றவாளிகளாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டில் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் மற்றும் மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சியின் போது வீரப்பனைப் பிடிக்க சிறப்பு அதிரடி படையை காவல்துறை அதிகாரி விஜயகுமார் தலைமையில் அமைத்தார்.
பின் இந்த அதிரடி படை வீரப்பனை தொடர்ந்து கண்கானித்து வந்த நிலையில் தர்மபுரிக்கு அருகே வைத்து வீரப்பன், அவருடைய கூட்டாளிகளான சந்தன கவுடா,மல்லு, சேத்துக்குளி கோவிந்தன் ஆகியோர் சுடப்பட்டு இறந்தனர்.
இந்த நிலையில் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது வீரப்பனுடன் இருந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களான கோவிந்தராஜ், நாகராஜ்,அன்றில்,முத்துச்சாமி,கல்மண்டி ராமன்,மாறன்,சத்யா,அமிர்தலிங்கம்,ரமேஷ் போன்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்சேட்டிபாளையம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.
தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது தகுந்த ஆதாரங்கள் மற்றும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று சுட்டிகாட்டியதுடன், பிணைத்தொகை கேட்கும் ஆடியோ கேஸட் போன்றவற்றை நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை என குறிப்பிட்ட நீதிபதி, போலீஸார் காலதமதமாகவே பிற ஆதாரங்களையும் சமர்பித்தனர் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் வீரப்பன் கூட்டாளிகளான இவர்கள்தான் இக்கடத்தில் வழக்கில் ஈடுபட்டார்கள் என்பதை மெய்ப்பிக்கும் ஆதரங்கள் அளிக்கப்படாததால் இந்த வழக்கில் நிலவும் சந்தேகத்தின் தன்மையால் குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்து தீர்ப்பளித்தார்.