தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் பாமக நிறுவனர் ராமதாஸ் மீது கடும் விமர்சனம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதியை இன்று முடிவு செய்ய இருப்பதாக தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழக உரிமைகளை மத்திய அரசுக்கு மாநில அரசு காவு கொடுத்து வருகிறது. வன்னியர்களுக்கு 15% உள் ஒதுக்கீடு கோரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக 26-க்கும் மேற்பட்ட வன்னியர் சங்கங்கள் போராடி வருகின்றன.
ஆனால் பாமக தலைமைக்கு இவை பற்றியெல்லாம் அக்கறை இல்லை, நோட்டுக்கும் சீட்டுக்கும் தன் கொள்கைகளை அதிமுகவிடம் விற்பனை செய்துள்ளார். தன் கல்வி நிறுவனங்கள் வன்னியர் நல வாரிய சொத்துக்களுடன் சேர்ந்து விடாமல் இருக்கவே ராமதாஸ் பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.