Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

64 வயதுடைய பெண்மணிக்கு புதிய வாழ்க்கை தந்த வெங்கடேஸ்வரா மருத்துவமனை

64 வயதுடைய பெண்மணிக்கு புதிய வாழ்க்கை தந்த வெங்கடேஸ்வரா மருத்துவமனை
, சனி, 23 ஜனவரி 2021 (18:59 IST)
சென்னையில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனை 64 வயதுடைய பெண்மணிக்கு புதிய வாழ்க்கை தந்துள்ளது.
 
மிகவும் அரிதான உயிருக்கு ஆபத்தான இதயக் கட்டி சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
 
வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளி ஆரோக்கியமாக வீட்டிற்க்கு அனுப்பப்பட்டர்.
 
சென்னை. 23 ஜனவரி, 2021: சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள பல்நோக்கு மருத்துவமனையான வெங்கடேஸ்வரா மருத்துவமனை, கரோனரி தமனி நோய், சிஸ்டமிக் ஹைபர்டென்ஷன், நீரிழிவு நோய் மற்றும் பிற பல இணை நோய்களால் அறியப்பட்ட 64 வயது கொண்ட பெண்மணிக்கு சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் திறமையான சிகிச்சையை வழங்கியுள்ளது.
 
இந்த பெண்மணி இடது மேல் மற்றும் கீழ் மூட்டு உணர்வின்மை மற்றும் பலவீனம், தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகளுடன் அவர் ஆரம்பத்தில் மருத்துவமணியில் அனுமதிக்கப்பட்டார் மற்றும் அவரை பரிசோதனை செய்ததில் கடுமையான பக்கவாதம் - வலது PCA டெரிட்டரி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.. அவருக்கு ECHO பரிசோதனை செய்யப்பட்டதில் IAS (இன்டர் ஏட்ரியல் செப்டம்) உடன் இணைக்கப்பட்டு பெரிய LA மைக்ஸோமா 3.8 x 2.7 செமீ அளவீட்டை கொண்டிருந்தது. கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் இடது ஏட்ரியல் மைக்ஸோமாவை வெளியேற்ற வேண்டும்  என அறிவுரை வழங்கினார். இந்த பெண்மணி செப்டிசீமியா, இரத்த சோகை, கரோனரி தமனி நோய், கடுமையான பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் ஆகியவற்றுடன் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு  மருந்துகள் மூலம் சிகிட்ச்சை அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டார் மற்றும் அவரது உடல்நிலை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், நோயாளி 05.01.2021 அன்று மைக்ஸோமாவை வெளியேற்ற அறுவை சிகிச்சைக்கு  அழைத்துச் செல்லப்பட்டார். அறுவை சிகிச்சையானது அவருக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டு இப்போது அவர் வழக்கமான அன்றாட நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடிகிறது.
 
ஏட்ரியல் மைக்ஸோமாக்கள் குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லாத முதன்மை இதயக் கட்டிகளாகும், எனவே ஆரம்பகால நோயறிதல் ஒரு சவாலானதாகும். இது ஆண்டுக்கு 20 மில்லியன் நபர்களில்  ஒருவருக்கு ஏற்படும். இடது ஏட்ரியல் மைக்ஸோமா ஆஸ்கல்டேஷனில் (இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினை கேட்க்கக்குடிய ஒலிச்சோதனை)  சிறப்பியல்பு கண்டுபிடிப்புகளை உருவாக்காது. இரு பரிமாண எக்கோ கார்டியோகிராபி, கண்டறியும் முறையின் சிறந்த தேர்வாகும். இதனை கண்டறிந்து முறையான சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த நோயாளிகள் திடீர் மாரடைப்பு அல்லது திடீர் மரணம் அல்லது பெருமூளைச் சிதைவு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படக்கூடும். மைக்ஸோமா முதன்மை இதயக் கட்டிகளில் 50% ஆகும். இதனால் பாதிப்புக்குள்ளான பெரும்பாலான நோயாளிகள் பரந்த இடைவெளியில் உள்ளனர் மற்றும் சரியான காரணங்கள் அறியப்படவில்லை.
 
ஏட்ரியல் மைக்ஸோமாவுக்கு இதுவரை மருத்துவ சிகிச்சை எதுவும் கண்டறியப்படவில்லை ஸ்ட்ரோக், இதய செயலிழப்பு, CHF (கான்ஜெஸ்டிவ் ஹார்ட் ஃபெயிலர்), கார்டியாக் அரித்மியா போன்ற சிக்கல்களுக்கு மட்டுமே மருந்து சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றுவது மட்டுமே சிறந்த நெறிமுறை ஆகும்.
இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை பற்றி விளக்கிய வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர், டாக்டர் சு. தில்லை வள்ளல் MD., DM  (Cardiology.)., FRCP, “மிகவும் அரிதான உயிருக்கு ஆபத்தான இதயக் கட்டி எங்கள் மருத்துவமனையில் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது, இது நோயாளியின் உயிர் காக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. . நோயாளிக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ மருத்துவமணியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறினார்.
 
வெங்கடேஸ்வரா மருத்துவமனை பற்றி:
 
வெங்கடேஸ்வரா மருத்துவமனை சென்னை நகரின் மையத்தில் அமைந்துள்ள பல் நோக்கு மருத்துவமனையாகும். இது 135 படுக்கைகள் கொண்ட மற்றும் ISO 9001: 2015 சான்றளிக்கப்பட்ட மற்றும் NABH அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையின் சிறப்பம்சம் மேம்பட்ட இருதய மற்றும் சிக்கலான பராமரிப்பு சேவைகளுக்கான விசாலமான ICU ஆகும். மூத்த மருத்துவர்கள் தலைமையில் இயங்கும் மற்ற அனைத்து முக்கியமான மருத்துவ சிறப்பு பிரிவுகளும் இந்த மருத்துவமனையில் உள்ளன. மருத்துவமனையின் முக்கிய அம்சமாக இருதயவியல் மற்றும் இதய பராமரிப்பு உள்ளது இது சென்னை நகரத்தின் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த இருதயநோய் நிபுணர் டாக்டர் சு. தில்லை வள்ளல் MD., DM  (Cardiology.)., FRCP, அவர்கள் தலமையின் கீழ் இயங்குகிறது. அவரது தலமையின் கீழ் இயங்கும் குழுவில் நோயாளிகளை கவனித்துக்கொள்ள 6 மூத்த இருதய நோய் மருத்துவ நிபுணர்கள் மற்றும் 4 இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர். கோவிட் -19 தொற்றுநோய்  உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்த மருத்துவமனை மகத்தான சேவைகளைச் செய்ததோடு, 5,000 க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சையினை  வழங்கியுள்ளது 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசமறுத்த மம்தா பானர்ஜி