மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால் நேரில் ஆஜராக இயலாது என விஜய் வருமான வரித்துறையிடம் அவகாசம் கேட்க உள்ளதாக தகவல்.
வருமானத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் விஜய் வீட்டில் அதிரடியாக ரெய்டு செய்தனர். இரண்டு நாட்கள் விஜய் வீட்டில் ரெய்டு செய்த அதிகாரிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டதாகவும் பிகில் படத்தில் அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு? வருமான வரி அலுவலகத்தில் தெரிவித்த கணக்கு எவ்வளவு? என்பது குறித்து விசாரணை செய்ததாகவும் கூறப்பட்டது.
இதனை அடுத்து வருமானவரித்துறை சோதனை முடிந்து கடந்த இரண்டு நாட்களாக நெய்வேலியில் நடைபெற்ற ஒரு ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அதிரடியாக வருமானவரி அலுவலகத்தில் இன்று விஜய் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விஜய் மட்டுமின்றி ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களும் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தர்போதைய தகவலின் படி வருமான வரித்துறையின் விசாரணைக்கு நடிகர் விஜய் இன்று ஆஜராகவில்லை என தெரிகிறது. மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால் நேரில் ஆஜராக விஜய் அவகாசம் கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளார்.