நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படம் ஓடுவதற்காக பரபரப்பாக ஏதாவது பேசுவார்கள் என்றும் அவ்வாறே விஜய்யும்பேசி உள்ளதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றும் அவருடைய அவருடைய கோணத்திலிருந்து பார்த்தால் அவர் பேசியது சரிதான் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கூறியுள்ளார்
மேலும் நடிகர்கள் ஆயிரம் பேசுவார்கள், அவர்கள் பேசுவதை எல்லாம் அரசியலாக பார்க்க முடியாது. நடிகர்கள் தங்களுடைய படத்தின் விளம்பரத்திற்காகவும், பல கோடி ரூபாய் முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர்கள் தங்களது முதலீட்டை எடுப்பதற்காகவும், படம் விற்பனை ஆவதற்கும், மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதற்காகவும், அதிக சம்பளம் வாங்கும் விஜய் போன்ற நடிகர்கள் பரபரப்பாக எப்போதுமே தன்னுடைய படம் வரும்போது ஒரு செய்தியை பரப்புவது வழக்கமான ஒன்றுதான்
அதன் பின்னர் முதலமைச்சர் விளக்கம் கேட்டால், ’நான் அந்த அர்த்தத்தை கூறவில்லை’ என்று கூறுவது வழக்கமாக இருக்கின்றது என்று கூறினார். மேலும் யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வைக்க வேண்டும் என்று விஜய் கூறிய கருத்துக்கு பதில் கூறிய செல்லூர் ராஜு, ‘மக்கள் சரியாக யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அங்கே சரியாகத்தான் உட்கார வைத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் பதவியிலும் எதிர்க்கட்சியினரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அங்கேயும் மக்கள் சரியாக உட்கார வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் விஜய் கூறியது தவறு ஏதும் இல்லை’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்