தமிழக அரசின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
2011 முதல் 2018 வரையிலான 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் வழங்கப்பட்டன. மொத்தம் 201 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன. பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி கலைமாமணி விருதுடன் அளிக்கப்படும் பதக்கம் 3 சவரனிலிருந்து 5 சவரனாக உயர்த்தப்படுவதாகவும், அடுத்த முறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் கார்த்திக், பிரசன்னா, சசிகுமார், எம்.எஸ்.பாஸ்கர், பொன்வண்னன், சரவணன், சூரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா போன்ற பல திரைப்பிரபலங்கள் விருதினை பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிலையில் விருது அறிவிக்கப்பட்டிருந்த நடிகர் விஜய் சேதுபதி விருதினை பெற வரவில்லை. மேலும் நடிகர் சந்தானம், பிரபுதேவா, பிரியாமணி, பாடலாசிரியர் யுகபாரதி போன்ற சிலரும் விருது வழங்கும் விழாவுக்கு வரவில்லை. அவர்கள் வராததற்கான காரணங்கள் தெரியவில்லை.