ரூ.43.50 இலட்சம் மதிப்பிலான தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
, வெள்ளி, 29 மே 2020 (23:59 IST)
குடிமராமத்து நாயகனாக மக்கள் மனதில் வீற்றிருப்பவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளபாளையம் ராஜவாய்க்காலில் ரூ.43.50 இலட்சம் மதிப்பிலான தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்து மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் புகழாரம்.
அதன் விபரம் வருமாறு:
கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்குட்பட்ட மொச்சக்கொட்டாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பள்ளபாளையம் ராஜ வாய்க்காலில் மாண்புமிகு முதலமைசர்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.43.50 இலட்சம் மதிப்பில்வெள்ள தடுப்பு சுவர்கட்டுதல், முட்புதர்களை அகற்றி தூர்வாருதல் உள்ளிட்டபணிகளுக்கான பூமிபூஜை நிகழ்வில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று (29.05.2020) கலந்துகொண்டு, பணிகளை தொடங்கிவைத்துப் பார்வையிட்டார்.
பின்னர் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம்
தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின்
வழியில் நல்லாட்சி நடத்திவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள்,
கண்மாய்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வழிப்பகுதிகளை தூர்வார வேண்டுமென்று
குடிமராமத்து என்ற மகத்தான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள்.
அதனடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோரின் உத்தரவின் அடிப்படையில் பணிகள்
தமிழகம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நடப்பாண்டில் அமராவதிவடிநிலக்கோட்டத்திற்கு ரூ.197.50 லட்சம் மதிப்பில் 6 பணிகளும், நங்காஞ்சியார்வடிநிலக்கோட்டத்திற்கு ரூ.16 லட்சம் மதிப்பில் 2 பணிகளும் மற்றும் காவிரிவடிநிலக்கோட்டத்திற்கு ரூ.30 லட்சம் மதிப்பில் 2 பணிகளும் என மொத்தம் 10 பணிகளுக்கென்று ரூ.243.50 லட்சம் நிதிஒதுக்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில் இன்று பள்ளபாளையம் ராஜவாய்க்காலில் இடது கரை பாசன
வாய்க்காலில் 700 மீட்டர் நீளத்திற்கு மண்டிக்கிடக்கும் முட்புதர்களை அகற்றி தூர்வாரும்
பணி, வாய்க்காலின் கரைகளை பலப்படுத்தும் பணி, கரைகள் உடையாத வகையில் 127
மீட்டர் நீளத்திற்கு வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டும் பணி, வாய்க்காலின் தலைப்பு மதகில்
உள்ள திருகுஅடைப்பான்களை சரிசெய்யும் பணி, நீர்போக்கிகளை பழுதுநீக்கும் பணி
உள்ளிட்ட ரூ.43.50 லட்சம் மதிப்பிலான பணிகள் பள்ளபாளையம் ராஜவாய்க்கால் நீரினை
பயன்படுத்துவோர் சங்கம் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தப்பணிகளை
நிறைவேற்றுவதன் மூலம் கடைமடை வரை தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டு,
விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும்.
அமராவதி ஆறு பாசனப்பகுதிகளில் மாண்புமிகு முதலமைச்சரின் குடிமராமத்து
திட்டத்தின் கீழ் 2016-2017 ஆம் ஆண்டில் 6 பணிகள் ரூ.25.70 இலட்சத்திற்கும், 2017-2018
ஆம் ஆண்டில் 6 பணிகள் ரூ.60.40 இலட்சத்திற்கும் மற்றும் 2019-2020 ஆம் ஆண்டில் 6
பணிகள் ரூ.174.00 இலட்சத்திற்கும் அந்ததப்பகுதி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்கள்
மூலம் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் மூலம்
கடந்த ஆண்டு காவிரி வடி நிலக்கோட்டத்திற்குட்பட்ட புஞ்சைபுகளுர் வாய்க்கால், வாங்கல்
வாய்க்கால், நெரூர் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது. நடப்பாண்டில்ஈரோடு மாவட்டத்தில் இருந்து பிரிந்து கரூர் மாவட்டத்தில் அதிக பாசனப்பரப்புகளுக்குபயன்படும் வகையில் அமைந்துள்ள புஞ்சைபுகளுர் வாய்க்காலை தூர்வாரி, கரைகளைபலப்படுத்தும் பணிக்காகவும், மதகுகளை சரிசெய்யும் பணிக்காகவும் ரூ.41 கோடிக்கு திட்டஅறிக்கை தயாரிக்கப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம்சமர்பித்துள்ளோம். விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் குடிமராமத்து நாயகன்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரைவில் இதற்கான நிதியினை ஒதுக்கிதருவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, அமராவதி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர்திரு.முருகேசன், உதவிசெயற்பொறியாளர் திரு.சரவணன், உதவி பொறியாளர்கள் திரு.இராஜகோபால், திரு.ராமச்சந்திரன், கரூர் நகரக்கூட்டுறவு வங்கித்தலைவர்திரு.திருவிக, பள்ளபாளையம் வாய்க்கால் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தலைவர் திரு.சு.பழனிசாமி
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த கட்டுரையில்