முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வாங்கி குவித்த சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸ் வெளியிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் விஜயபாஸ்கர். இவர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறையினர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தினர். வருமானத்துக்கு அதிகமாக ரூ.27,22,56,736 சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயபாஸ்கர் வாங்கி குவித்த சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸ் வெளியிட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
அரசு பதவியை தவறாக பயன்படுத்தி அறக்கட்டளை தொடங்கிய விஜயபாஸ்கர் 14 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
பதவிக்காலத்தில் ரூ.6.58 கோடிக்கு 7 டிப்பர் லாரிகள், 10 சிமெண்ட் கலவை லாரிகள், ஜேசிபி வாங்கி இருக்கிறார்.
ரூ.53 லட்சத்துக்கு பி.எம்.டபுள்யூ கார் வாங்கி இருந்ததாகவும், ரூ.40 லட்சம் மதிப்பிலான 85 சவரன் நகைகளும் விஜயபாஸ்கரால் வாங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சிலாவட்டம், மொரப்பாக்கத்தில் சுமார் ரூ.4 கோடிக்கு விவசாய நிலங்களை வாங்கியுள்ளார்.
லஞ்ச பணத்தில் சென்னை தியாகராயர் நகரில் ரூ.15 கோடிக்கு வீடு, பல நிறுவன பங்குகளை ரூ.28 கோடிக்கு வாங்கி இருக்கிறார்.
விஜயபாஸ்கர் தன் மனைவி, 2 மகள்கள் மற்றும் தனது பெயரில் ரூ.58 கோடிக்கு சொத்துக்கள் வாங்கியுள்ளார். 5 ஆண்டுகளில் வங்கிக்கடன், காப்பீட்டுத்தொகை என ரூ.34.5 கோடி செலவு செய்துள்ளார்.
வங்கி வைப்புத்தொகை, நகைகள், விவசாய நிலம், வீட்டுமனைகள், முதலீடுகளாக விஜயபாஸ்கரிடம் ரூ.6.4 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன.