Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த்! நடிகர் என்ற பந்தா இல்லாதவர் !- அமைச்சர் துரைமுருகன் இரங்கல்

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (14:29 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த்  நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமா துறையினர் மத்திலும் தொண்டர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகாந்த் உடலுக்கு, சினிமாத்துறையினர், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை தீவுத்திடலில் இருந்து 2.15 மணியளவில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாலை 4.45 ,மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்திடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பங்கேற்கவுள்ள நிலையில், தேமுதிக அலுவலகத்தில்  3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு  போட[ப்பட்டுள்ளது.

ஏற்கனவவே முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

விஜயகாந்த்!
நடிகர் என்ற பந்தா இல்லாதவர் I
பழகுவதற்கு இனிய நண்பர் 1
தமிழ் மொழி மீதும்,
தமிழ் மக்கள் மீதும்
அதிக பற்று கொண்டவர்!
தமிழுக்காக எந்த தியாகத்திற்கும் தயாராக இருந்தவர்!
கலைஞர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்!
அவருடைய மறைவு என்பது
ஜாதி, மதம், மொழி கடந்து,
ஏன் நாடு கடந்தும் கூட
பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது!
அவரை இழந்து வாடும்
அவருடைய குடும்பத்தினருக்கும்,
தொண்டர்களுக்கும்,
திரையுலக நண்பர்களுக்கும்
என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவருக்கு எனது அஞ்சலி....

 
என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments