Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஆன்லைன் வகுப்பால் உளைச்சல்; தலைமுடியை சாப்பிட்டதால் உருவான கட்டி! – விழுப்புரத்தில் விபரீதம்!

ஆன்லைன் வகுப்பால் உளைச்சல்; தலைமுடியை சாப்பிட்டதால் உருவான கட்டி! – விழுப்புரத்தில் விபரீதம்!
, வெள்ளி, 2 ஜூலை 2021 (09:58 IST)
விழுப்புரத்தில் ஆன்லைன் வகுப்பால் ஏற்பட்ட மன உளைச்சலாம் மாணவி முடியை தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் விழுப்புரத்தில் ஆன்லைன் மூலமாக படித்து வந்த 15 வயது மாணவி ஒருவர் அடிக்கடி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது வயிற்றில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்ட நிலையில் தலை முடியை உட்கொண்டதால் வயிற்றில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாணவி ஆன்லைன் வகுப்புகளால் மன உளைச்சலில் இருந்ததால் அடிக்கடி முடியை உட்கொண்டதாக தெரிய வந்ததை அடுத்து அவருக்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகை ஆளும் டெல்டா கொரோனா வைரஸ்... WHO எச்சரிக்கை!