Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வை இப்படி காட்ட வேண்டுமா? - தினகரனிடம் கதறிய விவேக் ஜெயராமன்

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (13:41 IST)
மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக தினகரன் மீது விவேக் ஜெயராமன் கடுமையான் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தற்போது வெளியிட்டுள்ளார்.  
 
20 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்த நிலையில், பழச்சாறு பருகியபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார்.  ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், முதன் முதலாக தினகரன் தரப்பில் இருந்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு ஜெ. மாற்றப்பட்ட போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
 
சசிகலா சிறைக்கு செல்லும் போது இந்த வீடியோவை விவேக் ஜெயராமனிடம் கொடுத்து சென்றதாகவும், எக்காரணத்தை கொண்டும் இதை வெளியிடக்கூடாது எனக்கூறியதாகவும் கூறப்படுகிறது. பரோலில் வெளிவந்த போது கூட, ஜெ.வின் மரணம் தொடர்பாக நம்மை அனைவரும் சந்தேகிக்கின்றனர். எனவே, வீடியோவை வெளியிட வேண்டும் என உறவினர்கள் கேட்ட போது கூட அதற்கு சசிகலா திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம். 


 

 
இந்நிலையில், விவேக் தரப்பிடமிருந்த வீடியோ தற்போது வெற்றிவேலால் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இதைக்கண்டு கொதிப்படைந்த விவேக், அம்மாவை இந்த கோலத்தில் யாரும் பார்க்கக் கூடாது என சின்னம்மா (சசிகலா) கூறியிருந்தார். அப்படியிருக்க, அதை ஏன் நீங்கள் வெளியிட்டீர்கள் என தினகரனிடம் கதறியதாக கூறப்படுகிறது.
 
அதே நேரம், இந்த வீடியோவை தினகரன் வெளியிடவில்லை. அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று ஒரு துண்டு பிரச்சார சீட்டு விநியோகிக்கப்பட்டதாகவும், அதில், ஜெ.வை சசிகலா குடும்பமே கொலை செய்தது. எனவே, தினகரனுக்கு வாக்களிக்கக் கூடாது என பிரச்சாரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த வெற்றிவேல் இந்த வீடியோவை தன்னிச்சையாக வெளியிட்டார் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

முடிவுக்கு வந்தது 42 நாட்கள் போராட்டம்.. பணிக்கு திரும்பிய கொல்கத்தா மருத்துவர்கள்..!

ஊழல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.! முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு..!

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments