Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊடகங்களின் தவறை ஊடகத்திடமே தைரியமாக சுட்டிக்காட்டிய விவேக்!

Webdunia
ஞாயிறு, 23 ஜூன் 2019 (18:31 IST)
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தல் குறித்த செய்திகளுக்கு முன்னணி ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இணையாக இந்த தேர்தலை மிகைப்படுத்தும் ஊடகங்கள் இந்த தேர்தல் குறித்த செய்திகளை சேகரிக்க காலை ஆறு மணி முதல் தேர்தல் நடைபெறும் பள்ளியில் தவமிருந்தன
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விவேக் ஊடகங்களின் இந்த தவறை அவர்கள் முன்பே நாசுக்காகவும் தைரியமாகவும் சுட்டிக்காட்டினார். நடிகர் சங்க தேர்தல் என்பது 2000 பேர் உறுப்பினராக உள்ள ஒரு அமைப்பு. இந்த தேர்தல் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருவது குறித்து மகிழ்ச்சியே. அதேபோல் இன்று தண்ணீர் பிரச்சனை மிக அதிகமாக உள்ளது. இதற்காக பல தன்னார்வலர்கள் தாங்களே மக்களை திரட்டி ஏரி, குளங்களை தூர்வாரி வருகின்றனர். அதேபோல் மழை நீர் சேகரிப்பு செய்யும் பொதுமக்கள் அதுகுறித்த வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
 
எனவே ஊடகங்களாகிய நீங்கள் நடிகர் சங்க தேர்தலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தண்ணீர் பிரச்சனைகளுக்கும் கொடுத்து அதுகுறித்த செய்திகளையும் வெளியிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். இவரது பேச்சுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments