Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஒருமுறை ஓட்டு போட்டு மூன்று முதல்வர்களை கண்ட தமிழர்கள் நாம்!

ஒருமுறை ஓட்டு போட்டு மூன்று முதல்வர்களை கண்ட தமிழர்கள் நாம்!

ஒருமுறை ஓட்டு போட்டு மூன்று முதல்வர்களை கண்ட தமிழர்கள் நாம்!
, திங்கள், 6 பிப்ரவரி 2017 (10:00 IST)
தமிழக முதல்வராக சசிகலா நடராஜன் பதவியேற்க உள்ளது தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. கடந்த மே 16-ஆம் தேதி 15-வது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஆட்சியை தொடர்ந்தது.


 
 
ஒரு வருடம் கூட முடிவடையவில்லை, ஆனால் அதற்குள் மூன்று முதல்வர்கள் வர உள்ளனர். ஒரே ஒருமுறை தான் மக்கள் ஓட்டு போட்டார்கள், ஆனால் மூன்று முதல்வர்களை காண உள்ளனர் என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
 
முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணமடைந்ததையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வராக பதவியேற்றார். ஆனல் மூன்றாவது முதல்வராக தற்போது சசிகலா பதவியேற்க உள்ளார்.
 
நேற்று அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக அறிவித்தனர். இது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்துவைத்தவர்கள். ஒரு ஓட்டுக்கு மூன்று முதலமைச்சர்கள். வாவ்.. என டுவீட் செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வராக தகுதியே இல்லாத சசிகலா பேராசைப்படுவது ஏன்?