Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கிருஷ்ணகிரிக்கு வந்தன வாக்குப் பதிவு இயந்திரங்கள் – பரபரப்பாகும் தேர்தல் களம் !

கிருஷ்ணகிரிக்கு வந்தன வாக்குப் பதிவு இயந்திரங்கள் – பரபரப்பாகும் தேர்தல் களம் !
, வியாழன், 7 மார்ச் 2019 (10:16 IST)
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது தேர்தல் ஆணையம்.

நாடே நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது. எந்நேரமும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் நிலவி வருகிறது. நாடெங்கிலும் உள்ள மாநில மற்றும் தேசியக் கட்சிகள் தங்கள் கூட்டணிப் பேரங்களை கிட்டதட்ட முடித்து அடுத்தக்கட்டமாக வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்டிவருகின்றனர். மக்களும் தங்கள் கைகளில் கருப்புமைப் பூசிக்கொள்ள தயாராகிவிட்டன.

இந்நிலையில் தேர்தல் ஆணையமும் தங்கள் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டது. நாடு முழுவதும் தேர்தல் 9 கட்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திற்கு ஏபரல் இறுதி அல்லது மே தொடக்கத்தில் தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வாக்குப் பதிவு எந்திரங்கள் சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தெரிகிறது. பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் இயந்திரங்கள் ஆகியவை கொண்டுவரப் பட்டு தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

அடுத்தக் கட்டமாக வி.வி.பேட் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆய்வு செய்துள்ளார். பெல் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள், வி.வி.பேட் இயந்திரத்தின் செயல்பாடுகள் மற்றும் அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்து செயல் அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் செய்து காட்டினர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹெச் ராஜா vs கார்த்திக் சிதம்பரம் – ஸ்டார் தொகுதியாகுமா சிவகங்கை ?