Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்.. மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Mahendran
புதன், 31 ஜூலை 2024 (12:31 IST)
2003ம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக வழக்கில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த 2003 ஆம் ஆண்டு மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து பேரணி நடத்தினார். இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது தொடர்பாக மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் திருமாவளவன் ஆஜராகவில்லை என்பதை அடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வழக்கு தொடர்பாக திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர் மனுதாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து பிடிவாரண்ட் பிறப்பித்து ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு நீதிபதி இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளார். அன்றைய தினம் திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால், ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது: ஈபிஎஸ்

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை.. உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா?

தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments