Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேங்கர் லாரிகளைத் தொடர்ந்து தண்ணீர் கேன் உற்பத்தியாளர்களும் வேலைநிறுத்தம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (17:41 IST)
நிலத்தடி நீரை உறிஞ்சுவது தொடர்பாக விதிக்கப்பட்ட புதிய சட்டத்தை நீக்கக்கோரி டேங்கர் லாரி உரிமையாளர்களை அடுத்து தண்ணீர் கேன் உற்பத்தியாளர்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 3 ஆம் தேதி வரைமுரையின்றி நிலத்தடி நீர் உறிஞ்சுவதை தடுக்கும் முக்கியமானத் தீர்ப்பை அறிவித்தது. அதில் ‘சட்டவிரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சுவதற்கு தடை விதித்தும் வணிக பயன்பாட்டிற்காக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும்’ என்றும் கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லாரி உரிமையாளர்கள் முன்பு கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கையாக இந்த தடையை நீக்க வேண்டுமெனவும் மேலும் கனிமவளப் பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டுமெனவும் கூறியுள்ளனர். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் விநியோகித்து வந்த 4100 லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இதனால் உருவாகும் குடிநீர் தட்டுபாட்டை ஈடு செய்ய மாற்று வழிகளை அரசு ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் வேலைநிறுத்தத்தை கைவிடுமாறும் அவர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சியாக தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள தண்ணீர் கேன் உற்பத்தியாளர்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments