சென்னையின் நீர் ஆதாரங்களாக இருக்கும் ஏரிகளில் மிக வேகமாக நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் இதனால் பெங்களூர் போல் சென்னையில் தண்ணீர் கஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் 1.5 சதவீதம் வரை ஏரிகளில் நீர்மட்டம் சரிந்துள்ளதாகவும் 2015 ஆம் ஆண்டு போல் 2023 ஆம் ஆண்டு பெருமழை பெய்தும் ஏரிகள் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பெங்களூரில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் கஷ்டம் தலைவிரித்தாடி வரும் நிலையில் தொடர்ந்து சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் அச்சத்துடன் எழுந்துள்ளது.