தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் மிக விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை எதிர்கொள்ள வியூகம் அமைத்து வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் முன்னாள் திமுக தலைவரின் தொகுதி என்பதால் இந்த தொகுதியை தக்க வைத்து கொள்ள திமுக தீவிர ஆலோசனையில் உள்ளது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுக மற்றும் அமமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்செல்வன் கூறியதாவது: திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் நாங்கள் தான் வெற்றிபெறப் போகிறோம். அதன்பிறகாவது அவர்கள் மனம் திருந்தி அ.தி.மு.கவையும், கட்சி சின்னத்தையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இடைத்தேர்தலில் அவர்கள் வெற்றிபெற்றுவிட்டால் நாங்கள் அவர்களுடன் இணைந்து கொள்கிறோம். ஆனால் நாங்கள் வெற்றிபெற்றால் அவர்கள் எங்களுடன் இணைந்துகொள்வார்களா?" என்று சவால் விடுத்துள்ளார்.
வழக்கமாக தினகரன் கட்சியின் ஆதரவாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயகுமார் உடனுக்குடன் பதிலடி கொடுப்பது வழக்கம். அவருடைய பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்