கரூரில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பாரதப் பிரதமர் மோடி தீவிரவாதத்தை ஒழித்ததற்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவிக்கின்றன. தீவிரவாதத்தை ஒழிப்பது அரசியலாக்க கூடாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை காலத்தால் அழியாத திட்டங்கள் என்றும் அதைதான் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
என்பதையும், இங்குள்ள பா.ஜ.க வினர் குறைகூறுவதினால் தான் அதை நான் எடுத்துரைத்தேன் என்ற தம்பித்துரை, வெளிப்படையாக, பாரத பிரதமர் மறைந்த ஜெயலலிதாவின் திட்டங்களை பாராட்டினார்.
இதை தான் இங்குள்ள பா.ஜ.க வினர் உணரவேண்டுமென்றார். ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்ததோடு, ராணுவத்திற்கு வலுமை கொடுத்திருக்கின்றார். ஆகவே, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசினுடன் தான் நாங்கள் கூட்டணி என்கின்றார்.
ஆகவே அ.தி.மு.க கட்சியினையும், ஆட்சியினையும் குறைகூறினால் தக்க பதிலடி கொடுப்போம் என்றார். பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் வைகோ கருப்புக் கொடி காட்டுகிறாரே? என்று கேட்டதற்கு அவர் கருப்பு துண்டு தான் போட்டிருக்கிறார் அதை எடுத்து காண்பித்திருப்பார், என்று கிண்டலடித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மேலும் பேட்டியின் போது, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.