சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 354 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று,பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் இரண்டாவதுமுறையாக ஆட்சிப் பொறுப்பேற்றது.
ஆனால் தமிககத்தில் அதிமுக கூட்டணில் இடம்பெற்ற பாஜக பலத்தை தோல்வியைத் தழுவியது. ஆனால் தேனி மக்களவைத் தொகுதியில் துணைமுதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் தாகூர் மட்டும் வெற்றி பெற்று மக்களவையில் எம்பியாக பதவியேற்று மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் சட்டமன்ற ஆய்வுக்குழு கூடியது. இந்தக் கூட்டத்தின் தலைவரான துரைமுருகன் கலந்துகொண்டார். அத்துடன் ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினரான டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி எம்எல்ஏவுமான டி.ஆர்.பி ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
அதிமுகவின் சார்பில் அத்தொகுதி எம்பி ரவீந்தரநாத் குமார் பதவியேற்றார். அப்போது துரைமுருகனிடம் , ரவீந்தரநாத்குமார் மகிழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்க்கட்சியில் இருந்தாலும், தன்னுடன் இப்படி பேசுகிறாரே என்று நெகிழ்ந்த ரவீந்தரநாத் அவருக்கு அன்பு மிகுதியால் ஒரு சால்வை அணிவித்தார். அதற்கு துரைமுருகன் ரவீந்தரநாத்தை மனதார வாழ்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. தமிழக அரசியலில் எதிரும் புதிருமான இருகட்சிகளைச் சேர்ந்தவர்கள் இப்படி வாழ்த்துக்கூறி அன்பை பரிமாறிக்கொள்வது என்னமோ இந்த திராவிட அரசியலை ஆச்சர்யமாகவே நம் மக்கள் நோக்குவர்..
இப்புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகிவருகிறது. எதிர்க்கட்சிகள் சற்று அதிர்ந்து போயுள்ளனர்.