Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? - மருத்துவமனை அப்டேட்

விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? - மருத்துவமனை அப்டேட்
, சனி, 1 செப்டம்பர் 2018 (15:35 IST)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பற்றிய தகவல்கள் வெளியே கசிந்துள்ளது.

 
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த், கருணாநிதியின் மறைவிற்கு பின் திரும்பி வந்தார். விமான நிலையத்திலிருந்து நேரிடையாக கருணாநிதியின் சமாதிக்கு சென்ற அவர் நடக்க முடியாமல், சுற்றி நடப்பதை உணரமுடியாமல் நின்ற விதம் அந்த வீடியோவை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
 
இந்நிலையில்தான், நேற்று இரவு அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு  மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. அவர் நன்றாக இருக்கிறார். உடல் நலம் பெற்று விரைவில் திரும்புவார் என தேமுதிக தரப்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது.
 
சர்க்கரை, தொண்டையில் செய்த அறுவை சிகிச்சை, தைராய்டு ஆகியவற்றால் விஜயகாந்த் பாதிக்கப்பட்டுள்ளார்.  நடப்பதற்கும், பேசுவதற்கும் மிகவும் சிரமப்படுகிறார். அவ்வப்போது அவருக்கு மூச்சு திணறலும் ஏற்படுகிறது. நண்பவர்கள் அவரை சந்தித்தால் படப்பிடிப்பின் போது நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவு கூர்ந்து பேசுவது விஜயகாந்தின் வழக்கம். ஆனால், தற்போது வருபவர்கள் யார் என்பதையே உணரமுடியாதவராக அவர் இருக்கிறார். இது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்கா சென்று 40 நாட்கள் சிகிச்சை எடுத்தும் விஜயகாந்த் உடலில் எந்த முன்னேறமும் ஏற்படவில்லை. எனவே, அவரை மீண்டும் அமெரிக்கா அல்லது சிங்கப்பூர் சென்று சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 
விஜயகாந்தின் உடல்நிலை அவரின் ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
பூரண நலம் பெற்று கேப்டன் கம்பீரமாக திரும்புவார் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து: அழுத்தம் கொடுக்கும் வருமான வரித்துறை