Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதன்மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.
ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்றா பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் அதுவும் முழுக் கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே உள்ளது.
கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘பி 9’ அல்லது போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ‘பி 9’ மற்றும் போலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது. மேலும் நரம்பியல் கோளாறுகளிலிருந்து புதிதாகப் பிறக்கும் குழந்தையைப் பாதுகாக்கிறது.
கொய்யா பழத்தில் வைட்டமின் ‘ஏ’ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. இவை கண்பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்பார்வை குறைதலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்வைத் திறனையும் அதிகரிக்கிறது.
கொய்யாவானது அதிக அளவில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது. எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும்.
கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.