மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை துறையிலிருந்து கைத்தறித்துறை அமைச்சர் பதவி மாறும் வி.ஐ.பி .
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வேறு இலக்கா ஒதுக்க திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திட்டம்
திமுக கட்சி என்றாலே, பஞ்சபூதங்களில் ஊழல் என்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று தான் பேசப்பட்டு வந்த நிலையில், போடாத சாலைக்கு பில் பாஸ் ஆகி அந்த பணத்தினையும் முறைகேடாக எடுத்த விவகாரம் தமிழக அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த ஊழல் புகாரை வெளிக் கொண்டு வந்தவர், முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அடுக்கடுக்கான ஆதரங்களை கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், நீதி வேண்டி 5 முறைக்கும் மேல் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், 4 பேர் நெடுஞ்சாலைத்துறையில் சஸ்பெண்ட் தொடர்ந்து தற்போதுவரை 14 க்கும் மேற்பட்டோரை நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை சஸ்பெண்ட் செய்து வந்துள்ள நிலையில், உண்மை நிலையை திமுக அரசு ஒத்து கொண்டுள்ளதாக தான் மக்கள் கருதுகின்றனர். ஏற்கனவே பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்த செந்தில்பாலாஜி, தற்போது அவர், திமுக வில் சேர்ந்த உடனேயே, திமுக மாவட்ட பொறுப்பாளர், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ வேட்பாளர் மற்றும் ஜெயிக்க வைத்த பின்பு எம்.எல்.ஏ, தற்போது ஆட்சி மாற்றத்தின் போது கரூர் தொகுதியில் போட்டியிட்டு, தான் நினைத்த மாதிரியே மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பதவியையும், சபரீஸன் மூலமாக வாங்கினார்.
இதையெல்லாம், பிடிக்காத நிலையில், சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னரே அதிமுக வில் யாரை எதிர்த்து திமுக விற்கு சென்றாரோ, அவரை எதிர்த்து திமுக விலிருந்து அதிமுக விற்கு வந்தவர் சின்னசாமி, இந்நிலையில், தமிழக அளவில் இவருடன் பல்வேறு கட்சிகளுக்கு பயணித்தவர்களுக்கு நூற்றில் 70 விழுக்காடு கட்சி பதவி, நகரமைப்பு தேர்தலில் பதவி மற்றும் கவுன்சிலர் சீட்டுகள் என்று உள்ள போது, கரூர் மாவட்டத்தில் உள்ள மூத்த நிர்வாகிகள் இவர் (செந்தில்பாலாஜி) மேல் இன்னும் வேண்டா விருப்பில் தான் இணைந்து பணியாற்றுகின்றனர். அதுமட்டுமில்லாமல், கடந்த 2011 டூ 2016 வரை திமுக நிர்வாகிகளை வசைபாடி அதிமுக வில் அமைச்சர் பதவியையும் பிடித்த செந்தில்பாலாஜி, இவரால் அதிமுக அரசில் திமுக வினர் என்ற போர்வையில் ஜெயிலுக்கு போனவர்கள் ஏராளம், இதுமட்டுமில்லாமல், அன்று இவருக்கு சப்போட்டாக இருந்த ஜெயா டி.வி தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மிகவும் கேவலமாக பேசிய காட்சிகள் அனைத்தையும் மொத்தமாக அழித்து அதில் ஒரு தொகையை பெற்றது. ஏனென்றால் இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலும் பயணித்தவர் ஆவார். இந்நிலையில், தற்போது போடாத சாலைக்கு பில் பாஸ் செய்து அதில் ரூ 3.50 கோடி பணம் பெற்ற முறைகேட்டினை தமிழகத்தில் உள்ள மீடியாக்களும், கூடவே புது டெல்லியில் உள்ள மீடியாக்களும் இதனை செய்தியாக வெளியிட, முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு கடுமையான தலைவலியை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, ஆதரப்பூர்வமாக மின்சாரத்துறையில் பல கோடி ஊழல்களை ஆங்காங்கே பிரஸ் மீட் போட்டு தெரிவித்த நிலையில், இறுதியில் கவர்னர் வரை செந்தில்பாலாஜியால் சென்ற விவகாரத்தினையே முடிக்காத நிலையில், திமுக தலைமை அடுத்த தலைவலியாக, இந்த நெடுஞ்சாலைத்துறை முறைகேடு அதிலும் போடாத சாலைக்கு எப்படி பணம் எடுத்தார்கள் என்று அடுத்தடுத்து செந்தில்பாலாஜி மீது வந்த நிலையில்., எப்படி ராஜகண்ணப்பன் அமைச்சர் பதவியினை மாற்றி அமைத்தார்களோ, அதே போல, இந்த ஊழலில் இருந்த மக்களிடம் நல்ல பெயரை வாங்குவதற்காக, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பதவியிலிருந்து கைத்தறித்துறை அமைச்சர் பதவிக்கு மாற உள்ளதாக மேல் மட்ட அளவில் இந்த ரகசியம் கசிய தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், மதுவிலக்குத்துறையிலேயே அவரது சகோதரரின் பல கோடியினை திமுக ஆதரவு பெற்ற வார இதழ் நக்கீரன் இதழும் சேர்ந்து இரண்டு பக்க ஸ்பெஷல் கட்டூரைகளை கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக போட்டுள்ளதோடு, திமுக தலைமையின் அதிரடி முடிவு என்கின்றனர் மேல்மட்டம்